குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை தர வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த குழந்தைகளோ ஆரோக்கியமான உணவை சாப்பிடுவார்களா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. ஆகையால் காய்கறிகளை வைத்து சப்பாத்தியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – இரண்டு கப்
உப்பு – தேவையான அளவு,
முட்டை – 1,
காய்ச்சிய பசும்பால் – 100 மில்லி,
நெய் – இரண்டு ஸ்பூன்,
பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு – மாவுக்கு ஏற்ப அல்லது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப,
புதினா, கொத்தமல்லி தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு கரண்டி.
செய்முறை:
காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பச்சை வாசனை போகும் வரை காய்கறிகளை வதக்க வேண்டும். இதனோடு மசித்த உருளைக்கிழங்கு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை எடுத்துக் கொண்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அப்படி பிசைகின்ற பொழுது அந்த காய்கறி கலவையை இதில் சேர்க்க வேண்டும். சப்பாத்தி போல இதை தேய்த்து சூடான தோசை கல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வெஜிடபிள் சப்பாத்தி தயார்.




