வெங்காய வத்தலை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவருக்கும் பிடிக்கும் அசத்தலான செய்முறை..!!

கோடை வெயில் ஆரம்பித்து விட்டாலே பலரின் வீட்டில் வடகம் போடுவது வழக்கமாக இருக்கும். அப்படி வெங்காய வடகம் எப்படி வீட்டிலேயே அசத்தலாக செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் :

முழு வெள்ளை உளுந்து – 200 கிராம்

சின்ன வெங்காயம் – 2 கிலோ

பெருங்காய பொடி – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 தேக்கரண்டி

வெந்தய பொடி – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கொத்தமல்லி – 1 கட்டு

கருவேப்பிலை – சிறிய கப் அளவு

கரகரப்பாக அரைப்பதற்கு :

சீரகம் – 2 தேக்கரண்டி

பூண்டு – 1

மிளகாய் வத்தல் – 10

செய்முறை :

இரண்டு கிலோ வெங்காயத்தை குட்டியாக வெட்டி மூன்று முதல் நான்கு மணி நேரம் வெயிலில் உலர விடவும். அதுக்கடுத்து உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கொத்தமல்லி கருவேப்பிலை ஆகியவற்றை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். மேலும் பூண்டை தோல் உரித்து வைத்து மிளகாய் வத்தல் பூண்டு சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பருப்பை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். குறைந்தது பத்து நிமிடம் அதை அரைத்த பிறகு வெங்காயம் கடுகு, மஞ்சள் பொடி வெந்தய பொடி பெருங்காய பொடி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

கையை தண்ணீரில் நினைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சேர்த்து சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். இதை ஒரு சில நேரத்திற்கு பின்பு ஒரு சிறிய மேஜை கரண்டியை வைத்து வடகத்தை பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும். இரண்டு நாட்கள் ஆன பின்பு வடகம் நன்றாக காய்ந்து விடும். கடைசியாக வடகம் நன்கு காய்ந்த பிறகு காற்று போகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். இதைத் தேவையானபோது வறுத்து சாப்பிட்டால் சுவையான வெங்காய வத்தல் தயார்.

Read Previous

காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா..!! இதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்..!!

Read Next

காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் இத்தனை பிரச்சனைகளா..!! மக்களை கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular