வெட்டிவேருக்கு இவ்வளவு சக்தியா..?? வெட்டிவேரில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வெட்டிவேரில் உள்ள நன்மைகளை நமக்கு கூறியிருப்பார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் இருக்கும் நம்மில் பலருக்கும் இதன் நன்மைகள் மற்றும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியாது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
வெட்டிவேரின் எண்ணையைக் கொண்டு நீண்ட நாளாக ஆறாமல் இருக்கும் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் மறைந்துவிடும் என்றும் இந்த எண்ணையை உடலில் தேய்த்து குளிக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் அது மட்டும் இன்றி வெட்டிவேருடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட்டால் முகப்பருக்கள் நீங்கி முகம் அழகாக மாறிவிடும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். பருக்கள் மறைந்தாலும் ஒரு சிலருக்கு பருக்கள் இருந்த தழும்புகள் மட்டும் போகாது இதற்கு வெட்டி பேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அன்றாடக் கொதிக்க வைத்த அந்த தண்ணீரில் ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள பருக்களின் வடுக்கள் மறைந்துவிடும்.




