கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ல் திறக்கப்பட உள்ள நிலையில் புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்ப 2.72 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் முதல்நாளே புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.




