நம்மில் பல பேருக்கு டீ காபி குடிக்கும் பழக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் பலர் இந்த டீ காபிக்கு பதிலாக பாலை தினமும் குடிக்கலாம் என்று கூறுவார்கள். காரணம் அதில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த பாலை குடிப்பதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும்.
மேலும் நமது சருமத்திற்கும் பல நன்மைகள் வரும். பாலில் இருக்கும் கால்சியம் வைட்டமின் நமது சருமத்தின் அழகை அதிகரிக்க முக்கிய பங்கை வகிக்கும். பாலில் இருக்கும் வைட்டமின் ஏ வயதாகும் அறிகுறிகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. மேலும் நமது சருமத்தில் இருக்கும் செல்கள் சேதம் அடைவதை இது முற்றிலுமாக தடுக்கும்.
மேலும் பாலை குடிப்பதன் மூலம் உங்களுக்கு இயற்கையான பிரகாசம் வந்து சேரும். உங்களுக்கு முகப்பரு சார்ந்த பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காரணம் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஹார்மோனை தூண்டி முகப்பருவை வரவைக்கும்.




