இட்லி மென்மையா வருவதற்கு கண்டிப்பா இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணி பாருங்க..!!

Oplus_131072

 

இட்லி மென்மையாக செய்ய சில டிப்ஸ்!!

மிக்சியில் இட்லிக்கு அரிசியை அரைக்கும் போது அரிசியை 5-6 மணி நேரம் சூடான நீரில் ஊற வைக்க வேண்டும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் மாவில் போடவும். அப்படி செய்வதால் இரண்டு நாட்கள் கெடாமலும் புளிக்காமலும் இருக்கும்.

இட்லி மாவுடன் சிறிது வெண்டைக்காய் போட்டு அரைத்தால் இட்லி மாவு மிருதுவாக இருக்கும். தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும் பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும். இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சமைத்த சாதம் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக இருக்கும். இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்சியில் போட்டு அரைத்து, மாவில் கலந்து விட்டால் இட்லி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். இட்லி மாவுடன் சிறிது அவல் அல்லது ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் இட்லி மாவு மிருதுவாக இருக்கும். இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார்.

 

Read Previous

எச்சரிக்கை பதிவு..!! காலாவதியான பொருட்களை சாப்பிட்டால் நடக்கும் ஆபத்து பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

இயற்கையான முறையில் மருத்துவ குறிப்புகள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular