நம் கடைகளில் பல பொருட்களை தினமும் வாங்குகிறோம் ஆனால் அதில் உள்ள காலாவதின் நேரத்தை நாம் பார்ப்பதே இல்லை. இதனால் பெரிய பெரிய விளைவுகள் கூட ஏற்படலாம். மாதிரியான பொருட்களை நாம் உண்ணுவதன் மூலம் விளைவுகள் பெரிதாக தான் இருக்கும். தினமும் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு காலாவதி நேரம் என்று ஒன்று இருக்கிறது இந்த காலாவதி நேரம் தீர்ந்துவிடும் பட்சத்தில் அதை நாம் சாப்பிட க்கூடாது. தூக்கி குப்பையில் தான் போட வேண்டும். அந்தக் காலாவதி நேரம் முடிந்த பிறகும் அந்த உணவை நாம் சாப்பிடுவதன் மூலம் வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட நடக்க நேரிடும். எனவே பொருட்களை வாங்கும் போதும் அதை பயன்படுத்தும் போதும் அதை உண்ணும் போதும் கூட அந்த காலாவதி நேரத்தை கவனிப்பது அவசியமான ஒன்று.
காலாவதியான பொருட்களில் உருவாகும் வைரஸ் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நமது உடலுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தி பெரிய பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே பொருட்களை வாங்கும் போதும் அதை உண்ணும் போதும் உசாரா இருங்க மக்களே.




