வாழைக்காயின் தோலை குப்பையில் போடாமல் இப்படி செய்து பாருங்கள்..!! அசத்தலான டிப்ஸ் இதோ..!!

நம்மில் பல பேருக்கு வாழைக்காயை வைத்து செய்யும் உணவுகள் மிகவும் பிடிக்கும். அப்படி இந்த வாழைக்காயை வைத்து உணவு செய்த பிறகு இதன் தோலை குப்பையில் வீசி விடுவோம். ஆனால் வாழைக்காயை விடவும் அதன் தோலில் தான் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் அதிகமாக நிறைந்து இருக்கின்றது.

இந்த வாழைக்காய் தோலை வைத்து பொரியல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம். இந்த வாழைக்காயின் தோலை சிறிதாக வெட்டி எடுத்து மஞ்சள் தூள் கலந்து நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு உப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைக்கவும்.

அந்த தண்ணீரை வடித்து கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து நறுக்கி வைத்திருக்கும் பூண்டு வெங்காயம் பச்சை மிளகாய் வாழைக்காய் தோல் ஆகியவற்றை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் கருவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து கிளறி இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் தோல் பொரியல் தயார்.

Read Previous

2423 பேருக்கு காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! ரூ.1,42,400 வரை மாத ஊதியம்..!!

Read Next

HPCL – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 372 வேலைவாய்ப்புகள்..!! மாதம் ரூ.3,00,000/- வரை ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular