நாட்டு சக்கரைக்கும் வெல்லத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா..??

நாட்டு சக்கரைக்கும் வெல்லத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

நாட்டு சர்க்கரை …மற்றும் வெள்ளை சர்க்கரைக்கான வித்தியாசம் என்ன என்றால், கேள்வி மிகுந்த அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் பரவாயில்லை, இரண்டிற்கும் பதில் பார்ப்போம்…அதன் மருத்துவ பயன்களை பற்றியும் பார்ப்போம்

அண்மையில் கோவையில் இருந்து மேட்டூர் செல்லும் பொழுது, புளியம்பட்டி அருகில் ஒரு நாட்டுசர்க்கரை தயாரிக்கும் இடத்திற்கு சென்று சர்க்கரை வாங்கும் பொழுது, அவரிடம் கேட்டு அறிந்ததை சொல்கிறேன்.

சர்க்கரை வெள்ளையாக உள்ளது, நாட்டு சர்க்கரை செம்மண் நிறத்தில் உள்ளது.

நாட்டு சர்க்கரையை உலரும் பதத்தில் அதை உருண்டை பிடித்தால், அது தான் வெல்லம்..

ஆனால், வெள்ளை சர்க்கரையானது சல்பர் என்ற வேதிவினைப் பொருளை கலப்பதினாலேயே அந்த வெள்ளை நிறம் கிடைக்கப் பெறுகிறது.

கரும்பானது முதலில் சாறு‌பிழியப்படுகிறது…

பிழிந்து எடுக்கப்பட்ட கரும்பு சாறு பின்னர் கொதிக்க விடப்படுகிறது

அதே கொதிக்கும் பொழுது ஏதாவது கசடு அல்லது தேவையற்ற பொருள் இருப்பின் அது அந்த பெரிய கரண்டியை வைத்து வெளியே எடுக்கப்படுகிறது.

எதுவும் கலப்படம் இல்லாமலும் நாட்டுசர்க்கரை செய்யலாம். இருந்தாலும் பல நன்மைக்காக…

இதனுடன் தேங்காய் எண்ணெய், சோடா உப்பு மற்றும் சுண்ணாம்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் சேர்த்தால் தான் நாட்டு சர்க்கரை நன்றாக திரண்டு உருண்டு பதமாக பக்குவமாக கிடைக்கும் என்றார்கள்.

சோடாவானது கழிவுகளை நீக்க பயன்படுத்தப்படுகிறது.

சுண்ணாம்பு கால்சியம் சத்திற்காக மற்றும் பசைத்தன்மைக்காக சேர்க்கப்படுகிறதாம்.

நன்கு சுண்டிய பிறகு, கரும்பு பாலானது, தனியே கொப்புரையில் உலர வைக்கப்படுகிறது.

இப்படி உலர வைத்து பொடி பொடியாக இருப்பது தான் நாட்டு சர்க்கரை.

கடைகளில் என்ன விலை என்று தெரியவில்லை. நேரடியாக கொள்முதல் செய்தால்,

நாட்டு சர்க்கரை கிலோ: 60 ரூபாய்.

பயன்கள் என்னவென்றால்,…

வெள்ளை சர்க்கரையை காட்டிலும் நாட்டு சர்க்கரை/வெல்லம் பல நன்மைகளையே தருகிறது.

நாட்டு சர்க்கரையில் கால்சியம் மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்தானது மிகுதியாக உள்ளது. கால்சியத்தால் எலும்புகளுக்கு பலம் கிடைக்கும் மற்றும் இரும்பு சத்து இரத்த சோகை வராமலும் தடுக்க உதவுகிறது.

எப்பொழுதும் ஆரோக்கியமானதை தேர்ந்தெடுங்கள்!

உங்களின் மற்றும் பெற்றோரின் உடல்நலத்தில் சிறிது அக்கரையும் கொண்டிருங்கள்.

சுவைத்த அனுபவத்தில் சொல்கிறேன். மிளகு, சுக்கு, திப்பிலி போன்றவற்றை இதனுடன் சேர்த்து பொடியாக கலந்து வைத்துக் கொண்டால்…டீ வைக்கும் பொழுது, டீ மிகுந்த மணமாக இருக்கும்.

 

Read Previous

கல்யாண வீடுகளில் ரசம் ருசியாக இருப்பதன் ரகசியம் இதுதான்..!!

Read Next

சர்க்கரையை கொல்லும் நிலக்கடலையில் உள்ள அற்புத பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular