தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஃபிட்டர் மற்றும் வெல்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 21
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2025

பணியிட விவரங்கள்:

1. வெல்டர் (Skilled Assistant Grade – II – Welder)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வெல்டர் பிரிவில் ஐ.டி.ஐ.

சம்பள அளவு: ரூ. 19,500 – 71,900

2. ஃபிட்டர் (Skilled Assistant Grade – II – Fitter)

காலியிடங்கள்: 20

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஃபிட்டர் பிரிவில் ஐ.டி.ஐ.

சம்பள அளவு: ரூ. 19,500 – 71,900

வயது வரம்பு:

பொது பிரிவினருக்கு: 18 முதல் 32 வயதுக்குள் (01.07.2025 தேதியை அடிப்படையாகக் கொண்டு)

ஒதுக்கீட்டு பிரிவினருக்கு (SC, ST, SCA, MBC, BCM, BC): 59 வயது வரை தளர்வு வழங்கப்படுகிறது

தேர்வு முறை:

தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்கும்

ஐ.டி.ஐ மதிப்பெண்கள் – 60%

பத்தாம் வகுப்பு/பிளஸ் 2 மதிப்பெண்கள் – 40%

விண்ணப்பதாரர்கள் https://mrbonline.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினருக்கு: ₹600

SC/ST/SCA/மாற்றுத்திறனாளிகள்: ₹300

Read Previous

சர்க்கரை நோய் தீர்க்கும் இன்சுலின் தாவரம் வீட்டிலும் வளர்க்கலாம்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வேலைக்கே போகாமல் ரூ.26 லட்சம் சம்பளம் வாங்கிய ஊழியர்..!! எப்படி தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular