தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: 11ஆம் தேதி வரை தொடரும் மழை..!!

தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை, ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், வருகிற 11-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1000 செலவாகிறது..!! வெளியான தகவல்..!!

Read Next

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை: பாதுகாப்பு நடவடிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular