ஜிகர் தண்டாவின் வரலாறு தெரியுமா
ஜிகர் தண்டா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியப் பானங்களில் ஒன்றாகும். இது முதன்மையாக மதுரையில் உருவாகியதாகக் கருதப்படுகிறது. இந்த பானத்தின் பெயர் “ஜிகர் தண்டா” என்பது “குளிர்ச்சி கொடுக்கும் லிவர்” என்று பொருள்படும்.
முகலாயர்கள் காலத்தில் அவர்கள் இந்தியா வந்த போது வெப்பம் தாங்காமல் எதாவது குளிர் பானம் பற்றி உள்ளூர் மக்களிடம் கேட்ட போது பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதில் சுண்ட காய்ச்சியப்பால் மற்றும் நன்னாரி சர்பத் சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும் என்று கூறினார்கள்.
முகலாயர்களும் அதே போல தயார் செய்து பானையில் வைத்து நிலத்தில் புதைத்து வைத்து குளிர்ச்சி ஆனதும் குடித்து வந்தனர்.
1970 களில் ஒரு ஷேக் ஜிகர்தண்டாவை ஒரு வண்டியில் வைத்து விற்க தொடங்கினார்.
நாளடைவில் அது மக்களிடம் பிரபலம் அடைய ஜிகர்தண்டா கடையாக மாறியது அதன் பெயரும் ஜிகர்தண்டா என்றே அழைக்கப்பட்டது.




