இளையராஜா திரையிசையில் செய்த மூன்று மாற்றங்கள்..!!

Oplus_131072

இளையராஜா திரையிசையில் செய்த மூன்று மாற்றங்கள்

எனது வயதில் உள்ள இசை ரசிகர்கள் நான் சொல்லும் திரைப்பட பாடல் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும்

1….இளையராஜா வருவதற்கு முன் ஒரு பாடல் ஓடக்கூடிய நேரம் இரண்டரை நிமிடங்களாக இருந்தது. வெகு அபூர்வமான பாடல்கள் ஐந்து நிமிடம் ஓடும். இசைத்தட்டு இருந்த காலங்களில் பாதி பாடல் ஒரு பக்கத்தில் ஒலி பரப்பாகி பிறகு இரண்டாவது பக்கத்தை திருப்பி மீதி பாதியை கேட்கக்கூடிய சூழ்நிலை இருந்தது.
காலப்போக்கில் ஒரே பக்கத்தில் ஆறு பாடல்கள் பத்து பாடல்கள் என பதிவாகி வந்தன

ஆக” இளையராஜா வருவதற்கு முன்பு வரை ஒரு பாடலின் சராசரி நீளம் 2 1/2 நிமிடங்கள் அல்லது மூன்று நிமிடங்கள்
இளையராஜா வந்த பிறகு தான் ஒரு பாடலை நாலு நிமிடங்கள் நாலரை நிமிடங்கள் என்று மாற்றினார்.

இது ராஜா செய்த மிக முக்கியமான மாற்றம் ஆகும் .
காரணம் preludu..interlude
என்னும் முன்இசை மற்றும்
இடை இசைக்கு அதிகம் கருவிகளை பயன்படுத்த வேண்டியது இருந்ததால் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

2….அடுத்து இளையராஜா அவர்கள் செய்த பெரிய மாற்றம் பல்லவிகளில் செய்த மாற்றம்

இளையராஜாவுக்கு முன்பு வரை…
பல்லவி என்பது அளந்து வைத்த மாதிரி மூன்று சீர்களிலோ நான்கு சீர்களிலோ பாடல் வரும்
உதாரணமாக

“வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ ”

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்”

… இப்படி அளந்து வைத்த மாதிரி தான் பல்லவிகள் இருக்கும்

இளையராஜா இதிலும் மாற்றம் செய்தார்

பல்லவி சீர்களின் எண்ணிக்கையை கூட்டினார் .
சீர் என்றால் வார்த்தை என்று வைத்துக் கொள்ளுங்கள்

பழைய பாடல்கள் இரண்டு சீர் அல்லது நான்கு சீர் வரை இருந்த பல்லவிகளை ஆறு சீர் ஏழு சீர் எட்டு சீர் வரை கூட்டி அமைத்தார்

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி…”

“தேன் சிந்துதே வானம் உனை
எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க…”

இவ்வளவு நீளமாக பல்லவி அமைத்தார்.

(இது பற்றி இளையராஜா ஒரு மேடையில் குறிப்பிடும் போது நான் சொன்ன தத்தகாரத்தை (ட்யூனை )கேட்காத மாதிரியே புகை பிடித்துக் கொண்டு இருந்தார் கண்ணதாசன்.
பல்லவியை சொல்லி முடித்தவுடன் தூ என்று எச்சிலை துப்பினார்.
சிகரெட் எச்சிலை துப்பினாரா
டியூன் சரியில்லை என்று துப்பினாரா என்று தெரியாது
கவனிக்காத மாதிரியே இருந்த கவிஞர் எழுதிக் கொள் என்று சொல்லி மேலே கண்ட வார்த்தைகளை சரம் சரமாக சொல்ல ஆரம்பித்த வரிகள் வந்து விழுந்தன )

இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா சொன்ன கிளிப்பிங் ஒன்று பார்த்தேன்
ஆனால் இந்த பாடல் இசையமைத்தது வி குமார்
என்று முகநூல் தோழி Lakshmi
அவர்கள் பின்னூட்டத்தில் எழுதி உள்ளார்.. ஆனால் ஜி கே வெங்கடேஷ் அவர்களுக்கு இளையராஜா உதவியாளராக இருந்தபோது உருவான பாடல் இது.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இரண்டு சீர்கள் நான்கு சீர்களுக்கு எழுதி பழகிய கண்ணதாசன் இத்தனை சீர்கள் உள்ள பல்லவிக்கு எழுதி விடுவாரா என்ற ஐயம் இளையராஜாவுக்கு இருந்தது
ஆனால் கவிஞர் எளிதாக முடித்து தந்துவிட்டார்

3—மூன்றாவது மாற்றம் இடை இசையில் செய்த மாற்றம்

இளையராஜா வருவதற்கு முன்பு
இந்த இடையிசை எத்தனை சரணங்கள் இருந்தாலும் அத்தனை சரணங்களுக்கும் ஒரே மாதிரி இடை இசையை பயன்படுத்தினர் முந்தைய இசை அமைப்பாளர்கள்

ஆனால் இளையராஜா வந்த பிறகுதான் சரணத்துக்கு சரணம் இடையிசை வித்தியாச வித்தியாசமாக மாறி மாறி அமைக்கப்பட்டது..

இவை அடிப்படையில் இளையராஜா செய்த மாற்றங்கள்
ஒவ்வொரு பாடலிலும் செய்த பல்வேறு இசை நுட்பங்கள் பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கு
ஒரு நூலே எழுத வேண்டும்.

Read Previous

யார் முட்டாள்..??( விறகு வெட்டி.. அருமையான கதை) அருமையான சிறுகதை கண்டிப்பா படிச்சு பாருங்க..!!

Read Next

தினமும் 20 நிமிடம் கைதட்டுவதால்.. முதுகு வலியும்.. மூட்டு வலியும்.. இருந்த இடம் தெரியாமல் போகும் என்று சொன்னால் நம்புவீர்களா..?? கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular