யார் முட்டாள்..??( விறகு வெட்டி.. அருமையான கதை) அருமையான சிறுகதை கண்டிப்பா படிச்சு பாருங்க..!!

Oplus_131072

யார் முட்டாள்?

ஒரு விறகு வெட்டி காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தான். உச்சி வேளையின் போது அருகே இருந்த ஆற்றில் இறங்கி நீர் குடித்துவிட்டுத் திரும்பி வந்த போது அவன் ஆற்றுமணலில் ஏதோ ஒரு பொருள் பளபளவென மின்னுவதைக் கண்டு அதை எடுத்துப் பார்த்தான்.

அப்போது அவ்வழியே ஒரு வைர வியாபாரி வந்தான். அவன் விறகு வெட்டியின் கையில் இருப்பதைப் பார்த்துவிட்டு ”என்னப்பா! கண்ணாடித்துண்டை வைத்துக் கொண்டு அப்படிப் பார்க்கிறாய் ? நான் பத்து ரூபாய் கொடுக்கிறேன். எனக்குக் கொடுத்து விடு” என்றான்.

ஒரு கண்ணாடித்துண்டிற்கு ஒருவன் பத்து ரூபாய் கொடுக்க முன் வந்தால் அது மிகவும் விலையுள்ளதாகத்தான் இருக்கும் என ஊகித்து விறகு வெட்டி “இன்னும் அதிகவிலை கொடுத்தால் கொடுக்கிறேன்” என்றான். விறகு வெட்டி பதினைந்து இருபது என்று உயர்த்திக் கொண்டே போய் முடிவில் இருபத்தைந்து ரூபாய் கொடுப்பதாகக் கூறினான். விறகு வெட்டியோ இன்னும் அதிக விலை கேட்கவே வியாபாரியும் “இருபத்தைந்திற்கு மேல் இல்லை. நான் அடுத்த கிராமத்திற்குப் போய் விட்டு இன்னும் மூன்று மணிநேரத்திற்குள் திரும்பி வருகிறேன். அதற்குள் ஒரு முடிவுக்கு வா” என்று கூறிவிட்டுப் போனான்.

அந்தக் காட்டில் யார் வந்து விறகு வெட்டியிடம் அந்த வைரத்தை வாங்கிவிடப் போகிறார்கள்… என்று நினைத்தே அந்த வைர வியாபாரி போய்விட்டு மூன்று மணிநேரம் கழித்து வந்து “என்ன முடிவு செய்தாய்?” என்று கேட்டான்.

விறகு வெட்டியும் “அதை வேறு ஒருவருக்கு நூறு ரூபாய்க்கு விற்று விட்டேனே” என்றான். அப்போது வைரவியாபாரி “அட முட்டாளே! அது பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைரம். இவ்வளவு குறைந்த விலைக்கு விற்று விட்டாயே” என்றான்.

விறகு வெட்டியும் “யார் முட்டாள்? வைரத்தின் உண்மை விலையை அறியவே அப்படி நான் சொன்னேன். நீ பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதானால் உனக்கு அதைக் கொடுக்கி றேன்” என்றான்.
வியாபாரி கல்லாய்ச் சமைந்துப் போனான்!

 

Read Previous

கொடூர சம்பவம்..!! கணவனை ஏமாற்றிய இளம்பெண் முகம் வெடித்து கோர மரணம்..!!

Read Next

இளையராஜா திரையிசையில் செய்த மூன்று மாற்றங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular