உத்தர பிரதேசத்தின் பஹ்ஜோ பகுதியி சேர்ந்த கரண் மௌரியா, ஷப்னா என்ற இளம் ஜோடிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின் ஷப்னா தனது ஆண் நண்பருடன் போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதில் துரதிஷ்டவசமாக கரண் உயிரிழக்கவே, ஷப்னா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.




