தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்…!
பெரும்பாலான தந்தைகளின் இறுதிக் காலம் மௌனத்திலும், தனிமையிலும், சில நேரங்களில் புறக்கணிப்பிலும் கழிகிறது. இது நம்முடைய சமூகத்தின் மிகுந்த வருத்தமளிக்கும் உண்மை.
தந்தை என்ற மனிதர் வாழ்நாள் முழுவதும் கொடுத்து மட்டுமே பழகியவர். குடும்பத்திற்காக உழைத்தவர். ஆனால் வயதான பிறகு தாம் எதையும் கேட்காமல் மௌனத்தில் வாழ்கிறார். அப்போதுதான் அவரின் தேவைகளை பிள்ளைகள் அறிந்து நிறைவேற்ற வேண்டும்.
தந்தையின் மனதை நெகிழ்க்கும் சிறிய செயல்கள்:
அவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால் வாரப் பத்திரிகை, புத்தகம் வாங்கிக் கொடுங்கள்.
சில்லறைச் செலவுகளுக்காக சிறிது பணம் கொடுங்கள்.
மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளில் ஈடுபடுத்துங்கள்.
பேரன்–பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள்.
தனிமையை போக்க வானொலி அல்லது டி.வி. ஏற்பாடு செய்து விடுங்கள்.
குறிப்பாக, மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகக் கொடுமையானது.
பெண் சூழலுக்கு ஏற்ப பழகிக் கொள்ள முடியும். ஆனால் குடும்பத் தலைவனாக இருந்த தந்தை, தனது துணைவியை இழந்தவுடன் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார்.
தந்தையின் வாழ்நாள் முழுவதும் அவர் உங்களுக்காக உழைத்தார்.
இப்போது அவருக்காக நீங்கள் செய்யும் சிறிய அன்பான செயல்கள் தான் அவரின் இறுதி நாட்களை அமைதியாக்கும்.
✨ மறைந்த பிறகு மரியாதை செய்யாமல், உயிருடன் இருக்கும் போதே கௌரவியுங்கள்.
✨ தந்தை மரியாதைக்குரியவர்.




