உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமான வாகன விபத்துகள் ஏற்படுவதால், அம்மாநில அரசு ‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த இருக்கிறது. வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற பிரச்சாரம் நடத்தப்பட இருக்கிறது. மேலும், இது தண்டனை இல்லை என்றும், மாறாக வாகன ஓட்டிகள் சட்டத்தை முறையாகக் கடைபிடிக்க செய்வதற்கான முயற்சி என அரசு விளக்கமளித்துள்ளது.




