பீகார் தலைநகர் பாட்னாவில், மேற்குவங்கத்திலிருந்து துர்கா பூஜை நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு அழைக்கப்பட்ட சிறுமியை 6 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக அசோக் குமார், தீரஜ் குமார், ஆர்யன், பிரின்ஸ், பூஷன் குமார் மற்றும் சிந்து குமார் ஆகியோருடன் பிரியா விஸ்வாஸ் என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இளைஞர்கள், சிறுமியுடன் வந்த 2 பெண் நடனக் கலைஞர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.




