உடனடியாக சளி மற்றும் காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருத்துவம்..!!

தேவையான பொருள்:

மிளகு 10 எண்ணிக்கை
சுக்கு சிறிதளவு
ஏலக்காய் 2 எண்ணிக்கை
கொத்தமல்லி 5 கிராம்
சீரகம் 5 கிராம்
மஞ்சள் தூள் சிறிதளவு
தண்ணீர் 100 மி.லி
ஓமவல்லி இலை 1 அல்லது 2
நாட்டு சர்க்கரை தேவையான அளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகுசீரகம்,ஏலக்காய்,கொத்தமல்லி,மிளகு மற்றும் சுக்கு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  •  பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஓமவல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சளி நீங்கும்.

Read Previous

இடுப்பு வலி வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

இந்தியன் டாய்லெட் சிறந்ததா..? வெஸ்டர்ன் டாய்லெட் சிறந்ததா..? ஆய்வுகள் கூறுவது என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular