இந்தியன் டாய்லெட் சிறந்ததா..? வெஸ்டர்ன் டாய்லெட் சிறந்ததா..? ஆய்வுகள் கூறுவது என்ன..?

நம்மில் பலரும் அன்றாட வாழ்க்கையில் கழிவறையே பயன்படுத்துவது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், இந்த கழிவரையிலும் நவீனத்தை புகுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து விட்டனர். அந்த வகையில் இன்று பலரும் அதிகமாக வெஸ்டர்ன் டாய்லெட் க்களை தான் யூஸ் பண்ணுகின்றனர். இதனால் நடக்கும் ஆரோக்கிய சீர்கேடுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்ற இயற்கையான செயல்முறை என்ற வென்றால் நாம் கீழே முழங்கால்களை மடக்கி செரிமான பகுதி அமர்த்தி உட்காருவதே இதற்கு சிறந்த ஒரு முறையாகும். இதற்கு ஏற்றால் போல தான் இந்தியன் டாய்லெட்கள் இருக்கின்றன. மேலும் இந்தியன் டாய்லெட் களில் அமரும்போது அந்த டாய்லெட்டுக்கும் நமது உடல் பாகத்திற்கும் இடையே இடைவெளி இருக்கும் இதனால் பாக்டீரியா தொற்றுகள் போன்ற எந்த ஒரு தொற்றுகளுக்கும் நாம் ஆளாக மாட்டோம். ஆனால், இந்த நவீன உலகில் அனைவரும் வெஸ்டன் டாய்லட்டை பயன்படுத்தி, அதில் அமர்ந்தவாறு அதிக நேரமாக தொலைபேசி பயன்படுத்துவது மற்றும் போன் பேசுவது போன்ற பலவற்றை செய்து இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் பாக்டீரியா போன்ற தொற்றுகள் நம் வாய் வழியாக உடலுக்குள் செல்கிறது. இதனால் உடலில் பலவகையான நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக வயிற்றில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறுமா என்றால் அது கேள்வி குறித்தான். மேலும் வெஸ்டர்ன் டாய்லட்களை முழங்கால்களை மடக்க முடியாமல் இருக்கும் பெரியோர்கள், நோயாளிகள் போன்றோர்கள் மட்டும் பயன்படுத்தலாம். ஏனெனில், இந்தியன் டாய்லெட்கள் தான் சுகாதாரத்தில் சிறந்தது என மருத்துவர்கள் மற்றும் டாய்லெட் கட்டமைப்பு வல்லுனர்களும் கூறுகின்றனர்.

Read Previous

உடனடியாக சளி மற்றும் காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருத்துவம்..!!

Read Next

60 வயது ஆனாலும் எலும்புகள் பலமாக இருப்பதற்கு இந்த உணவுகளை எல்லாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular