சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருவதால் மக்களும், கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார். பையோபையோ மற்றும் நூபிள் பகுதிகளில் காட்டுத்தீ பரவி ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்துள்ளன. இதனால் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.




