பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ..??

Oplus_131072

 

தேவையான பொருள்கள் –
உருளைக் கிழங்கு – 3 (சிறியது)
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க –
தக்காளி – 1 (சிறியது)
தாளிக்க –
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1/2
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை –
தக்காளியை மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
குக்கரில் உருளைக்கிழங்கை 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மசாலா வாசனை அடங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பூரிக் கிழங்கு ரெடி…

 

Read Previous

படித்து மனசு வலித்தது..!! பெற்றோரை மனம் நோக செய்யாதீர்கள்..!!

Read Next

வெற்றிலை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular