தயிர் நல்லதா..?? மோர் நல்லதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

*அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாக மட்டுமில்லாமல், ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. அதே நேரத்தில் பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டால்,* *உடலுக்கு உபாதைகளும் உண்டு. கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, தயிர் சாப்பிடும் போது அளவாக பயன்படுத்த வேண்டும். தயிரை விட மோர் பயன்படுத்துவது சிறந்ததாகும். தயிர் குளிர்ச்சி என,நினைத்து பலர் சாப்பிடுகின்றனர்.* *அதை பிரிட்ஜில்வைத்துகுளிர்ச்சியாக்கியும் சாப்பிடுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. தயிர் உடல் சூட்டை அதிகமாக்கும். பிரிட்ஜில் வைத்தால் சூடு மேலும் அதிமாகும்.*

*தயிரில் உள்ள நன்மைகள் குறைவு. தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி, ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும். கண்டிப்பாக தயிரைஇரவில்சாப்பிடக்கூடாது.பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி,சித்திரைமாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.
தயிரை விட மோர்சிறந்ததாகும். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டால்,அது மோர் ஆகிவிடாது. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில், சரிபங்கு தண்ணீரைச் சேர்த்துநன்குகலக்கினால்தான் மோர் கிடைக்கும்.

*மோர்*
*எளிதாகஜீரணமாகிற உணவு. சாப்பிட்டபிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
*மூல நோய்க்கு மோர் பிரமாதமானமருந்து*
*அஜீரணக்கோளாறுகளுக்கும் மோர் சிறந்த மருந்து.*
*மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.*
*வெயிலால் உடம்பு சூடாகி, சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் நல்ல மருந்து மோர்தான்.* *ரத்தசோகைக்கும் மோர் நல்லது.*
*நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம்,உடலில் சேரும் விஷத்தை அகற்றும் சக்தி மோருக்கு உண்டு. சளி தொந்தரவு,தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது,மோர்சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மோர் சாதம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
*ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் ஆறியதும், இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். ஆனால், மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது. தினம் மதிய வேளை, 200 மில்லி மோர் அருந்தினால் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும்*
*மோர்*
*எந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு,ரசம்,மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம்மூரில் எழுதப்படாத ஒரு விதியாகவே இருக்கிறது.* *கோயில் திருவிழாவில் நீர்மோர் பந்தல்,* *கோடைகாலம் வந்தால் நீர்மோர் பந்தல் என நம் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத இடம் மோருக்கு உண்டு.*

*கால்சியம்குறைபாடு நீக்கும்*
*பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose intolerance) எனப்படுகிறது. இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவர்கள் மோர்குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது.*
*வயிற்றெரிச்சலைக்குறைக்கும்*
*காரமானஉணவுகளை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் பிரச்னை வரும். அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைத்துவிடும். இதனால் வயிறு எரிவது குறையும்.*
*நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும்.*

*நீரிழப்பைத் தடுக்கும்*
*தயிருடன் தண்ணீர்,உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில்* *நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது.*

*மோர்க்கரைசல்*
*செரிமானத்தை எளிதாக்கும்*
*தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன.தயிரை,மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில்ஏப்பம்விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது.
*கொழுப்பைக் குறைக்கும்*
*மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.* *இதை தினமும் குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.*

*உடல்நச்சுகளைவெளியேற்றும்*
*இதில் வைட்டமின் பி-2 உள்ளது.* இது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி-2 செல்களிலுள்ளஎன்சைம்களின் செயல்பாட்டைஆரம்பித்துவைக்கும். இது சக்தியாக மாற்றப்படும். இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். உடலில்உள்ளநச்சுப்பொருட்களையும் வெளியேற்றும்.*

*மோர் குடித்தல்*
*மலச்சிக்கலுக்கு மருந்து*
*உணவுப்பழக்கத்தை முறையாகப்பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மோரைதொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்.*
*உடல் எடையை குறைக்க*
*குறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு,சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது*
*. அதேநேரத்தில் இதில் புரதம்,*மினரல், வைட்டமின், கால்சியம்,மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன.*
பால்,தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு.
*முக அழகைக் கூட்டும்*
*இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். இதைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும்மாற்றக்கூடியது. முகத்தில் உள்ளசுருக்கங்கள் மறையவும் இது உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம்அடையும்பிரச்னைக்கு இது தீர்வு தரும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்திவர முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும்.*

*வயிற்றுப்புண்ணைகுறைக்கும்*
*வயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளுக்கும் மோர் தீர்வு தரும்.* *இதை தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புண் நீங்கும்.
*வாய்ப்புண் நீக்கும்*
*தினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும்.
*மூல நோய்க்கு மருந்து*
*சாப்பாட்டுடன் மோர் மற்றும் வாழைப்பழத்தைக்கலந்துகொள்ள வேண்டும்.*
இதனை தினமும் இரண்டுவேளை சாப்பிட்டுவர மூலநோயின் தீவிரம் குறையும்.*

*வெந்தயம் மோர்*
*சளியைப் போக்கும்*
*மோரில் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு அரைத்துச் சேர்க்க வேண்டும்.* *இதை சில வேளைகள் குடித்துவர வெகு விரைவில் சளி, ஜலதோஷம் நீங்கும்.*

சாப்பாட்டின் இறுதியாக மோர் குடிப்பதால் அது வயிற்றைக் குளுகுளுவென மாற்றுவதோடு, செரிமானத்தையும் எளிதாக்குகிறது.

 

Read Previous

முந்திரி பழத்தை பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

தேன் எறும்புகள் பற்றிய முக்கியமான பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular