Oplus_131072
தேவையான பொருட்கள்
வடித்த ஆறவைத்த சாதம் – 2 கப்
முட்டை – 2
நறுக்கிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி
சோயா சாஸ் – 1 தே.கரண்டி
வினிகர் – 1/2 தே.கரண்டி
மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
பொடியாக நறுக்கிய கராட், பீன்ஸ், கார்ன் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 மேஜை கரண்டி
மேலே தூவ தேவையான பொருட்கள் :
பொடியாக நறுக்கிய வெங்காய தாள் – சிறிதளவு.
செய்முறை
* முதலில் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.
* அதன் பின் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு பொடியாக நறுக்கிய காய்கள் சேர்த்து வதக்கவும்.
* பிறகு அதில் முட்டையினை ஊற்றி நன்றாக பிரட்டி முட்டையினை உதிரியாக பொடிமாஸாகி வேகவிடவும்.
* அடுத்தாக சோயா சாஸ்,வினிகர்,மிளகு தூள்,உப்பு சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடம் வேகவிடவும்.
* கடைசியில் சாதத்தினை இதில் சேர்த்து நன்றாக கலக்கவும். சாதத்தின் மீது வெங்காயதாளினை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான முட்டை பிரைடு ரைஸ் தயார்.




