எல்லோர்க்கும் ஏற்ற தாந்த்ரீக எளிய பரிகாரங்கள்..!!

Oplus_131072

எல்லோர்க்கும் ஏற்ற தாந்த்ரீக எளிய பரிகாரங்கள் !!!

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு :

1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.

கடன் தொல்லை தீர

1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்.

எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் ??

ஞாயிறு- ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்
திங்கள் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் – எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி.
புதன் – நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் – சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி – சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்.

அனைவருக்கும் பொருந்தும் சூட்சும பரிகாரங்கள்

(1) எப்பொழுதும் தலையணைக்கு ஊதா வண்ண கவர்களையே உபயோகப்படுத்துங்கள்
(2) தலையணை அடியில் சிறு படிகார கல் வைத்திருப்பது உத்தமம்
(3) அக்னி ஹோத்திரம் செய்ய பயன்படும்தாமிர பாத்திரத்தில் சந்தனம் மற்றும் கற்பூரம் சேர்த்து முக்கிய அறைகளில் வைத்திருக்கவும்.

Read Previous

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்..??

Read Next

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்..!! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular