பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருமா? – வெளியான தகவல்..!!

 

காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால், 2027ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் நோட்டுகள் முழுமையாக புழக்கத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. ஆரம்ப கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இருப்பினும், பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமானாலும், தற்போதுள்ள காகித ரூபாய் நோட்டுகள் செல்லாததாக மாறாது. இருவகை நோட்டுகளும் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

 

நீண்ட நாட்கள் நீடித்து பயன்படுத்தக்கூடியது, அழுக்கடையாமல் இருப்பது மற்றும் கள்ள நோட்டுகளைத் தடுப்பது போன்ற பல நன்மைகள் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

குறிப்பு: இதுகுறித்து ரிசர்வ் வங்கி (RBI) இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கின்றன.

Read Previous

தமிழக 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தாமதம் – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

Read Next

அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular