தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களை உறுதிப்படுத்துவதற்கான eKYC விரல்ரேகை பதிவு செய்யும் அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதுவரை eKYC கைரேகை பதிவு செய்யாத அந்தியோதயா ரேஷன் கார்டு உறுப்பினர்கள், தங்களது ரேஷன் கார்டுகள் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று விரல்ரேகையைப் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பு: காலக்கெடுவுக்குள் eKYC பதிவு செய்து, ரேஷன் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




