ஈரான் மீது அமெரிக்கா 7வது நாள் தாக்குதல்: 3 பேர் பலி..!!

ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் தீவிரம்: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு..

 

அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொஜ்தபா ஹூசேன் காமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹர்முஸ் ஜலசந்தி தொடர்பான நிலைமையும் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், ஹர்மோஸ்கன் மாகாணத்தில் அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் அண்மைய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிகழ்வுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read Previous

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..!!

Read Next

பலாக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular