சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே நிகழ்ந்த சோகமான சாலை விபத்தில், பைக்கில் பயணம் செய்த தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த கணவர் நித்யானந்தம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக மாதவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து கன்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




