தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தொடரும் என்றும் CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் திருவாரூரில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தவெக அமைச்சரவையில் எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறும் காலம் வரும் என்று CPI மாநில நிர்வாகி வீரபாண்டியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, CPI மற்றும் CPM ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியில் இணையக்கூடும் என்ற அரசியல் யூகங்கள் பரவலாக பேசப்பட்டன.
இந்த நிலையில், கூட்டணி குறித்த எந்த பேச்சும் இல்லை என்றும், தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் பெ.சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது இந்த விளக்கத்தின் மூலம், தவெக ஆட்சியில் CPM பங்கேற்கும் என்ற அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.




