ஹார்முஸ் நீரிணை பதற்றம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு – இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

 

 

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, தற்போது 90.13 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.

 

இந்த பதற்றமான சூழல் நீடித்தால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதன் தாக்கமாக, வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டால், போக்குவரத்து செலவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் பணவீக்கத்திலும் தாக்கம் ஏற்படக்கூடும்.

Read Previous

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

Read Next

ஒரே பைக்கில் 4 காவலர்கள்?.. வைரல் வீடியோவால் சர்ச்சை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular