ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் கட்டாயம் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பதிவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ரேஷன் கடைக்கு நேரில் வர இயலாதவர்களுக்காக, ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று பயோமெட்ரிக் பதிவு செய்து வருகின்றனர்.
அதேநேரத்தில், ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனாளிகளின் விவரங்களை துல்லியப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தலின்படி இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




