நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், தமிழக அரசுக்கு மொத்த வரி வருவாயாக ரூ.64,944.97 கோடி கிடைத்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம், விற்பனை வரி, ஆயத்தீர்வை வரி மற்றும் மத்திய அரசின் மானியம் உள்ளிட்ட பல்வேறு வருவாய் மூலங்களின் மூலம் இந்தத் தொகை கிடைத்துள்ளது.
இந்த வருவாய், தமிழக அரசு நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முக்கிய ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.




