நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது.
நீட் முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்குமாறும் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




