நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சோழவந்தானில் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்தில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களின் தீவிரம் அதிகரித்து வருவது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு பெரும் நிர்வாக சவாலாக மாறியுள்ளது.




