அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இணையவழியில் 1,500 முறைக்கும் மேலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் மென்பொறியாளரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்ரமணியன் என்பவர், அமெரிக்காவில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இணையவழி மிரட்டல்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




