சசிகலாவின் வழக்கறிஞராக செயல்பட்டு, அவரது சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் வழக்குகள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அமமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.
தவெக அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில், ராஜா செந்தூர் பாண்டியன் முறைப்படி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அரசியல் மற்றும் சட்டத் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரின் இணைவு, தவெகவின் அமைப்பு ரீதியான வளர்ச்சியில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.




