நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார்.
நாட்டின் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அனுமதித்ததுடன், அதனை ஊக்குவித்தவரும் பிரதமர் மோடியே என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர் பிரதமர் என்றும், கல்வித் துறையின் வீழ்ச்சிக்கு காரணமான முக்கிய நபர்களை மத்திய அரசு பாதுகாத்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.




