காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்காக விமல் வழங்கிய காசோலைகள் பணமின்றி திரும்பியதை தொடர்ந்து, அவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கில் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




