துப்பாக்கி சுடும் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்… துப்பாக்கி ஏந்தி பயிற்சியிலும் அசத்தல்..!!

 

 

சென்னை வேளச்சேரியில் 51-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று (ஜூலை 27) கோலாகலமாக தொடங்கின. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

 

விழாவைத் தொடர்ந்து, துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் செயல்முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், துப்பாக்கியை கையில் ஏந்தி பயிற்சியிலும் ஈடுபட்டார். இலக்கை நோக்கி அவர் துப்பாக்கி சுடும் காட்சி அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான இந்தப் போட்டியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read Previous

அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ₹25-க்கு அசைவ உணவு? பாமக நிழல் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!!

Read Next

Wi-Fi-யை கண்டுபிடித்தது யார் தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular