விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், “ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி டா” என்ற ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த வசனத்தைப் பேசிய நடிகர் சிவா காலமானார்.
‘கில்லி’ மட்டுமின்றி, ‘குருவி’, ‘மதுர’ உள்ளிட்ட விஜய்யின் பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




