இந்தியாவில் ‘ஜெமினி ஸ்பார்க்’ (Gemini Spark) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட்டை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெமினி 3.5 தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த சேவை, ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் பின்னணியில் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்களை தயார் செய்வது, முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை திட்டமிடுவது, நினைவூட்டல்களை நிர்வகிப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளை பயனர்களின் நேரடி தலையீடு இல்லாமலேயே தானாக மேற்கொள்ளும் வகையில் இந்த AI ஏஜென்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தினசரி பணிகளை எளிமையாக்கி, நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பமாக ‘ஜெமினி ஸ்பார்க்’ உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




