சீன வாகன நிறுவனங்களின் கடுமையான போட்டி மற்றும் மந்தமான உலகப் பொருளாதார சூழல் காரணமாக, 2027-ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் பணியாற்றும் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய BMW நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வாகனங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதும், அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரிகள் போன்ற பொருளாதார சவால்களும் இந்த முடிவுக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதன் தாக்கம் BMW-க்கு மட்டுமல்லாமல், உலகளாவிய வாகனத் துறையையே பாதித்து வருகிறது.
உலக சந்தையில் போட்டியை சமாளிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், BMW-யின் இந்த அறிவிப்பும் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளது.




