கன்னியாகுமரியில் பரபரப்பு: சிவசேனா மாநிலத் தலைவர் அதுல் மர்ம மரணம்.. கொலை கோணத்தில் தீவிர விசாரணை..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் அடிப்பகுதியில், சிவசேனா கட்சியின் கேரளம் மாநிலத் தலைவர் அதுல் (32) என்பவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முதற்கட்ட விசாரணையில், அதுலின் உடலில் பல வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவர் கொலை செய்யப்பட்ட பின்னர் உடலை ஆற்றில் வீசி சாட்சியங்களை மறைக்க முயற்சித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அதுல் பயன்படுத்திய காரில் ரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

 

சம்பவம் தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களை சேகரித்து, சிசிடிவி காட்சிகள், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் தடயவியல் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலைக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

பட்டப்பகலில் இளைஞர் உயிரிழப்பு.. மதுரை அருகே பரபரப்பு..!!

Read Next

தமிழகம் முழுவதும் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular