காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே முடங்காமல், மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், புதிய உத்வேகத்துடன் கட்சியினர் செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, அதனைத் தொடர்ந்து நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரது இந்த பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




