MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தயார் செய்து கலந்தாய்வுக்கு தயாராகி வருகின்றனர்.




