புதுச்சேரியில் நடைபெற்ற அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கோகுல் (18) என்ற இளைஞர், 1.6 கி.மீ ஓட்டப்பந்தயத்தின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கோகுலை உடனடியாக மீட்ட அதிகாரிகள், புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முறையான உடற்பயிற்சி மற்றும் பயிற்சி இல்லாமல் திடீரென அதிக வேகத்தில் ஓடும்போது இதயத்தில் ஏற்படும் அழுத்தம் காரணமாக இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




