குஜராத் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை? கேப்டன்சி நிபந்தனையால் ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கல்!

 

 

ஐபிஎல் தொடரில் தான் ஏற்கனவே விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அப்போது, மீண்டும் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஹர்திக் பாண்டியா முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது இந்த கோரிக்கையை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2022ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும், 2023ஆம் ஆண்டு ரன்னர்-அப் இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீண்டும் குஜராத் அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Read Previous

குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீகத்தில் சொல்லப்படும் நம்பிக்கைகள்!

Read Next

ஒசூர் அருகே கார் விபத்து: தவெக எம்.எல்.ஏ. சரவணன் மனைவிக்கு பலத்த காயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular