தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சரவணனின் மனைவி உமாவதி பயணம் செய்த கார், ஒசூர் பேரண்டப்பள்ளி அருகே நேற்று (ஆக.11) அதிகாலை விபத்தில் சிக்கியது.
கர்நாடக மாநிலம் தும்கூரில் இருந்து உறவினர்களுடன் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உமாவதிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், காரில் பயணம் செய்த அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேருக்கும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




