தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை!

 

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.

 

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

கடந்த 5ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனையானது. அதன்பிறகு 9 நாட்களில் சவரன் விலை ரூ.5,920 உயர்ந்துள்ளது.

 

தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்து வருவது நகை வாங்க திட்டமிடுபவர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

செல்போன் பயன்பாட்டால் நடிகை ஷகீலாவுக்கு அறுவை சிகிச்சையா? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

Read Next

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு! தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular